திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்துவில் – அக்கறைபற்று வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
அக்கறைபற்றில் இருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அக்கறைபற்று, பனங்காடு பகுதியை சேர்ந்த 33 வயதுடைய சாய் தாஸன் என்பவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.