எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை கையளிப்பதற்கான காலலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை  இன்று (30) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெறும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும்.