கொழும்பிலிருந்து, புத்தளம்- அருவக்காடு கழிவு முகாமைத்துவப் பிரிவுக்கு குப்பைகளுடன் பயணித்த 28 லொறிகளை,

11 மணித்தியாலங்கள் தடுத்து வைத்திருந்த பிரதேச மக்கள், பின்னர் பொலிஸார் வழங்கிய வாக்குறுதிக்கமைய அவற்றை விடுவித்துள்ளனர்.

கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டுவதால், அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நேற்று (30) நள்ளிரவு முதல் வீதியை மறித்து நின்ற பிரதேச மக்கள், குப்பை லொறிகளை செல்லவிடாது தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அருவக்காடு கழிவு முகாமைத்துவ நிலைத்தின்  நுழைவாயிலுக்கு முன்பாக நின்றே, அவர்கள் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த இடத்துக்கு வருகைதந்த பொலிஸார், இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றிடம் அறிவிப்பதாக உறுதியளித்ததையடுத்து, மக்கள் அவ்விடத்தை விட்டு அகன்றுச் சென்றுள்ளனர்.

இன்பின்னரே, 11 மணித்தியாலங்கள் வீதியில் காத்துக்கிடந்த லொறிகள் பயணிக்கத் தொடங்கியுள்ளன.