ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாஸவின் தெரிவுக்கு, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் குழு, ஏகமனதாக அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இன்று (01) காலை, கொழும்பிலுள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடிய அரசியல் குழுக்கூட்டத்தின் போதே, அங்கிகாரம் வழங்கப்பட்டது.

மேலும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற வேண்டிய விவகாரங்கள் தொடர்பிலும் சஜித் பிரேமதாஸவுடன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய உடன்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.