மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தின நினைவினை முன்னிட்டு  அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்,

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (01) நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து ஆகியோர் மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

இலங்கையுடன் மிகவும் ஆழமான உறவை மகாத்மா காந்தி கொண்டிருந்தார் என்பது 1927 இல் இலங்கை தீவு முழுவதும் அவர் மேற்கொண்ட பரந்த பயணங்கள் மூலமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அவருக்கும் இலங்கைக்குமான ஆழமான உறவையும் மகாத்மா காந்தியுடைய பிறந்த தின நினைவையும் கொண்டாடும் இரட்டை கொண்டாட்டமாகவே ஒவ்வொரு  ஆண்டும் இலங்கையில் நடைபெறும் காந்தி ஜெயந்தி நிகழ்வுகள் அமைகின்றன.