ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருவதுடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை, 17 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனரென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை,  அடுத்த மாதம் 6 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.