திருகோணமலையில் இன்று துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் 4 கிலோ ரி.என்.ரி வெடிமருந்துகளுடன் ஒருவரை கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் திருகோணமலை நகரில், அருணகிரி வீதியில் வசிக்கும் 61 வயதுடையவர் எனவும், ஏற்கனவே வெடிமருந்தை வைத்திருந்த குற்றம் நிருபிக்கப்பட்டவர் எனவும், பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். ரி.என்.ரி வெடிமருந்து விற்பனைக்காக வைத்திருந்த நிலையிலே தாம் சந்தேக நபரை கைது செய்ததாகவும் திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட வெடிமருந்தையும் கைது செய்த சந்தேக நபரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நோக்கில் துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.