யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையமானது சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திரத்துக்கு அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பிரதேச விமான நிலையமாக காணப்பட்ட யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையமானது சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை கடந்த ஜுலை மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அபிவிருத்தி நடவடிக்கைகளை எதிர்வரும் 10ஆம் திகதி நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச விமான பயணங்களுக்காக எதிர்வரும் 17ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினமொன்றில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விமான நிலையத்தை திறந்துவைக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

பலாலி விமான நிலையமானது சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டதை அடுத்து, இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையம், இரத்மலானை சர்வதே விமான நிலையம், யாழ்ப்பாணம் சர்வதே விமான நிலையம், மட்டக்களப்பு சர்வதே விமான நிலையம் மற்றும் மத்தல சர்வதே விமான நிலையம் ஆகியவை இலங்கையிலுள்ள சர்வதே விமான நிலையங்களாகும்.