முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புத்துவெட்டுவான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் வைரவிழா நிகழ்வு (03.10.2019) இன்று பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சார்பில் அதன் மத்தியகுழு உறுப்பினர் தோழர். வே. சிவபாலசுப்ரமணியம் கலந்துகொண்டிருந்தார். கடந்த ஆண்டில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் நிதியுதவியில், மாணவர்கள் அனைவருக்கும் தேவையான கற்றல் உபகரணங்களும் சீருடைத் துணிகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்ததோடு, இப் பாடசாலையினைச் சுற்றி காணப்பட்ட பற்றைக் காடுகள் நீக்கப்பட்டு பாடசாலையின் பயன்பாட்டுக்குரிய நிலம் அதிகரிக்க வழி செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.