ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு ஊடாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காலி மநகர சபையின் முன்னாள் மேயர் மெத்சிறி டி சில்வா, இந்த மனுவினை இன்று தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, அக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். 2015, ஜனவரி 8ஆம் திகதி நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் 6 ஆண்டுகள் பதவி காலத்துக்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டதாகவும் இந்த நிலையில், 5 வருடங்களில் தேர்தலை நடத்துவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 7ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைக்கும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.