Header image alt text

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு ஏகமனதாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு தலைமை நீதிபதி யசன்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் குறித்த மனு இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. Read more

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு ஊடாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரிக்கை விடுத்து உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

காலி மநகர சபையின் முன்னாள் மேயர் மெத்சிறி டி சில்வா, இந்த மனுவினை நேற்று தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, அந்தக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர். Read more

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இன்று முற்பகல், தேர்தல்கள் செயலகத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாச சார்பில் ‘அன்னம்’ சின்னத்துக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும், பதிவுசெய்யப்படாத அரசியல் கட்சியின் வேட்பாளராக சமல் ராஜபக்ஷவிற்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்முறை தேர்தில் களமிறங்காவிட்டால் இலங்கையில் முதன் முறையாக பதவியிலிருக்கும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் போட்டியிடாத முதலாவது தேர்தலாக அமையும் என்பது விஷேட அம்சமாகும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிடுவதாக இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. Read more

உடன் அமுலுக்கு வரும் வகையில் ரயில்வே ஊழியர்கள் அனைவரையும் பணிக்கு திரும்புமாறு, ரயில்வே பொது முகாமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஆராய்ந்தார். ஹெலிகொப்டர் மூலமாக மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சென்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. Read more

யாழ். தென்மராட்சி – மட்டுவில் சந்திரபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் நுழைந்து வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் இன்று அதிகாலை நுழைந்த நான்கு பேர் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் உட்பட வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் சத்தமிட்டதால், குறித்த ஆயுதக் கும்பல் தப்பித்துச் சென்றுள்ளனர். Read more

14 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் தமது நற்சான்றுப் பத்திரங்களை நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளித்தனர்.

அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு Read more

கொழும்பில் உள்ள பல ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட பிரிவு ஒன்றை அமைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கையொப்பதுடன் கடந்த இரண்டாம் திகதி கொழும்பில் உள்ள ஹோட்டல்கள் சிலவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன. மீண்டும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் போன்று மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் ஆகவே ஹோட்டல்களுக்கு வருகைதருவோர் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. Read more

மட்டக்களப்பு, செங்கலடி – பதுளை நெடுஞ்சாலையில் முதிரையடி ஏற்றம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் பலியானதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் செங்கலடி, அம்மன்புரம் கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் மனோராஜ் (வயது 26) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். செங்கலடி, அம்மன்புரத்தில் இருந்து கார்மலையில் உள்ள தனது மாட்டு பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவேளை கித்துள் கிராமத்தில் இருந்து செங்கலடி நோக்கி வந்த டிப்பர் ரக வாகனம் முதிரையடி ஏற்றம் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்களாகியுள்ளது. Read more