ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இன்று முற்பகல், தேர்தல்கள் செயலகத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாச சார்பில் ‘அன்னம்’ சின்னத்துக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும், பதிவுசெய்யப்படாத அரசியல் கட்சியின் வேட்பாளராக சமல் ராஜபக்ஷவிற்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் துமிந்த நாகமுவ, இன்று தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று காலை அவர், ஜனாதிபதி தேர்தலுக்கான தனது கட்டுப்பாணத்தை செலுத்தியுள்ளார். இதன்போது, முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் சேனாதீர குணதிலக மற்றும் சமீர கொஸ்வத்த ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.