எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக தபால் மூல வாக்களிப்பதற்கு விண்ணப்பங்களை அனுப்ப வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. இதற்கான கால எல்லை கடந்த 30ம் திகதி நிறைவடைய இருந்தது.

எனினும் கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தபால் மூல விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இன்றுவரை நீடிக்கப்பட்டிருந்தது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஞாயிறுடன் நிறைவடையவுள்ளது. அதேபோல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணிவரை முன்னெடுக்க முடியும். தேர்தல்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் இதற்கான கரூம பீடம் அமைக்கப்பட்டுள்ளது.