மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஆராய்ந்தார். ஹெலிகொப்டர் மூலமாக மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சென்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் விமான நிலைய அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அதன் பின்னர் விமான நிலையத்தினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டார்.