யாழ். தென்மராட்சி – மட்டுவில் சந்திரபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் நுழைந்து வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் இன்று அதிகாலை நுழைந்த நான்கு பேர் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் உட்பட வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் சத்தமிட்டதால், குறித்த ஆயுதக் கும்பல் தப்பித்துச் சென்றுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.