மட்டக்களப்பு, செங்கலடி – பதுளை நெடுஞ்சாலையில் முதிரையடி ஏற்றம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் பலியானதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் செங்கலடி, அம்மன்புரம் கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் மனோராஜ் (வயது 26) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். செங்கலடி, அம்மன்புரத்தில் இருந்து கார்மலையில் உள்ள தனது மாட்டு பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவேளை கித்துள் கிராமத்தில் இருந்து செங்கலடி நோக்கி வந்த டிப்பர் ரக வாகனம் முதிரையடி ஏற்றம் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்களாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.