Header image alt text

நீதிமன்ற உத்தரவை அவமதித்து, செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரின் சடலத்தை தகனம் செய்து. ஆலயத்தில் வீண் சச்சரவுகளை ஏற்படுத்தி அடாவடித்தனமாக நடந்துகொண்ட பொதுபலசேனவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரவைக் கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி யாழில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)வின் ஏற்பாட்டில் யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் ரெலோ தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் என். சிறீகாந்தா, புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் நகரசபை, பிரதேசசபை, முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

யாழ் கட்டப்பிராய் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய களஞ்சிய அறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ். மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் முன்னாள் வட மாகாணசபை அமைச்சர் சர்வேஸ்வரன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

யாழ். கூழாவடி ஆனைக்கோட்டை சிறுவர் பூங்காவின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் வலிதென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் ஜெபநேசன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

வலிதென்மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் கணேசவேல் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் நடனேந்திரன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன் மற்றும் வலிதென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். Read more

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தாலும் இன்றும் 12 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. கம்பஹா, பொல்கஹவெல, மஹவ உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து கொழும்பு கோட்டை வரை குறித்த ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.பீ. ஜயம்பதி தெரிவித்தார்.

இதனிடையே, சம்பள பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று 10வது நாளாகவும் தொடர்கின்றது. ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். Read more

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம சேவகர்களும் எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

அதற்கமைய அன்றைய தினங்களில் தத்தமது அலுவலகங்களுக்கு முன்னாளும், கொழும்பு நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள பிரதான காரியாலயத்திற்கு முன்பும் ஒன்று கூடி ஆர்பாட்டங்களை நடத்துமாறு கிராம சேவையாளர்களின் தொழிற்சங்க ஒன்றியம் கேட்டுள்ளது. Read more

2019 ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் பணி நாளையுடன் நிறைவடைகின்றது. நாளை காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையில் கட்டுப்பணம் செலுத்த முடியும்.

5 ஆம் திகதியான இன்று கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஜனாதிபதி தேர்லுக்காக கட்டுப்பணம் பொறுப்பேற்கும் பணி கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமானது. நேற்று வரையில் 33 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழு கட்டுப்பணம் செலுத்தியவர்களின் விபரங்களை வெளியிட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

சம்பள முரண்பாட்டை முதன்மையாக கொண்டு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்ட முன்னணி தெரிவித்துள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள போதும், வேதன ஆணைக்குழுவால் குறித்த பரிந்துரைகள் செயற்படுத்தப்படாமையினால் பணிபகிஷ்கரிப்பை தொடர்ச்சியாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அந்த முன்னணியின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே சாரதிகளின் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியத்தை கருத்திற் கொண்டு ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி நேற்று முன்தினம் நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. Read more

கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள பூட்டப்பட்ட வீடு ஒன்றில் இருந்தே இவ்வாறு சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குறித்த பகுதியை சேர்ந்த 29 வயதான ஆணின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு பிள்ளையின் தந்தையான நிதர்சன் குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். Read more