கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள பூட்டப்பட்ட வீடு ஒன்றில் இருந்தே இவ்வாறு சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குறித்த பகுதியை சேர்ந்த 29 வயதான ஆணின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு பிள்ளையின் தந்தையான நிதர்சன் குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.குறித்த நபர் தொடர்பில் 5 நாட்களாக தேடி வந்த நிலையில் உறவினர்கள் குறித்த வீட்டிற்கு சென்றுள்ளனர். குறித்த வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் துர்நாற்றம் வீசியுள்ளது. சம்பவத்தை பொலிஸாரிற்கு தெரியப்படுத்தியதன் பின்னர் உயிரிழந்தவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.