யாழ். கூழாவடி ஆனைக்கோட்டை சிறுவர் பூங்காவின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் வலிதென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் ஜெபநேசன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

வலிதென்மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் கணேசவேல் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் நடனேந்திரன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன் மற்றும் வலிதென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.