நீதிமன்ற உத்தரவை அவமதித்து, செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரின் சடலத்தை தகனம் செய்து. ஆலயத்தில் வீண் சச்சரவுகளை ஏற்படுத்தி அடாவடித்தனமாக நடந்துகொண்ட பொதுபலசேனவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரவைக் கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி யாழில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)வின் ஏற்பாட்டில் யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் ரெலோ தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் என். சிறீகாந்தா, புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் நகரசபை, பிரதேசசபை, முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தார்கள்.