ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே சாரதிகளின் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியத்தை கருத்திற் கொண்டு ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி நேற்று முன்தினம் நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் சேவையில் இருந்து விலகியதாக குறிப்பிட்டு கடிதங்களை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.