Header image alt text

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு நாளை முற்பகல் 9 மணி முதல் 11 மணி வரை ஏற்று கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், வேட்புமனுத் தாக்கல் தொடர்பில் ஆட்சேபனையை முன்வைக்க நாளை முற்பகல் 11 மணிமுதல் 11.30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இன்று முற்பகல் 12 மணிவரையான காலப்பகுதிக்குள் 41 வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. Read more

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தொடர் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க வேண்டாம் என ரயில்வே திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் ஊழியர்களிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

தொழில் உரிமையை பெற்றுக் கொள்வதற்காக சட்டத்தால் தடை விதிக்கப்படாத நடவடிக்கைகளில் ஈடுபட, அரச ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு உள்ள உரிமைகளுக்கு தாம் மதிப்பளிப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளார். Read more

திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் சடலம் ஒன்றை புதைப்பதற்காக மயானத்தில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, ஆயுதங்கள் சிலவற்றை கண்டெடுத்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுயில் மண்ணுக்குள் புதைந்திருந்த கலனொன்றை திறந்து பார்த்தபோது அதற்குள் ஆயுதங்கள் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து, பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. Read more

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார். மிரிஹான பகுதியில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் வைத்து அவர் கையொப்பமிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ தனது வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார். மிரிஹானவில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் வைத்து அவர் கையொப்பமிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை முதல் காரியாலய புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரை புகையிரத ஓட்டுனர்களாக பயிற்றுவிப்பதற்காக இராணுவதி தளபதி முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்தவித நிபந்தனைகளும் இன்றி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். Read more