திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் சடலம் ஒன்றை புதைப்பதற்காக மயானத்தில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, ஆயுதங்கள் சிலவற்றை கண்டெடுத்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுயில் மண்ணுக்குள் புதைந்திருந்த கலனொன்றை திறந்து பார்த்தபோது அதற்குள் ஆயுதங்கள் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து, பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கி ரவைகள் மற்றும் மகசின் உள்ளிட்ட ஆயுதங்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் யாவும் சுத்தப்படுத்தி, பாவிக்கும் நிலையில் காணப்படுவயாகவம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.