திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் உள்ள தொல்பொருள் திணைக்களம் உரிமை கோரும் பிள்ளையார் கோயில் அமைந்துள்ள பிரதேசத்தில் கோயில் அல்லது பௌத்த விகாரை அமைப்பதோ அல்லது திருத்த வேலைகள் செய்வதற்கோ வழக்கின் தீர்ப்பு கிடைக்கும் வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை முடிவில் அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் வெந்நீர் ஊற்று பகுதிக்கு விஜயம் செய்பவர்களுக்கு மட்டும் டிக்கட் விற்பனை செய்யவும் தொல்பொருள் திணைக்களத்திற்கு அனுமதியும் நீதிபதியால் வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இம்மாதம் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.