Header image alt text

ஆசிய கடற் பாதுகாப்பின் பிரதான மாநாட்டின் 15ஆவது கூட்டம் இலங்கையில் இடம்பெறவுள்ளது. இலங்கை கடற் பாதுகாப்புத் திணைக்களம் இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், இந்த மாநாடு இலங்கையில் இடம்பெறுவது இதுவே முதன் முறையென்பதுவும் குறிப்பிடதக்கது.

இது தொடர்பான செயற்பாட்டு பிரதிநிதிகளின் கூட்டம் கொழும்பு கோல்ஃபேஸ் ஹொட்டலில் இன்று ஆரம்பமானது. மேலும், இந்தக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் கீழான சரத்துக்கள் அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பான வழக்கை முடிவிற்கு கொண்டு வருவதற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த மனுவை தாக்கல் செய்த தரப்பினர் அதனை விலக்கிக் கொள்வதற்கு முன்வைத்த கோரிக்கையை கவனத்தில் கொண்ட உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. மாற்றுக் கொள்கை கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. Read more

தேர்தல்கள் தொடர்பான உங்களுடைய முறைப்பாடுகளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவுக்கு, குறுந்தகவல்கள் ​(SMS) மூலம் அனுப்பி வைக்குமாறு, ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, 1919 என்ற அவசர இலக்கத்துக்கு, இவ்வாறான தேர்தல்கள் முறைப்பாடு குறித்த குறுந்தகவல்களை அனுப்ப முடியும்.

அவ்வாறு அனுப்பும் முறைப்பாடுகளை,

EC <Space> EV <Space> குறித்த மாவட்டம் <Space> உங்கள் முறைப்பாடு

என்று type செய்து, 1919 என்ற இலக்கத்துக்கு Send செய்யவும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலுக்காக வாக்களிப்பதற்காக பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படவுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்துள்ளார்.

ஏட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்காக இம்முறை தயாரிக்கப்படவுள்ள வாக்குச் சீட்டானது வரலாற்றில் மிகவும் நீளமான வாக்குச் சீட்டாகும் என அவர் தெரிவித்தார். தேர்தல் விதிமுறைகளை மீறும் சம்பவம் தொடர்பில் முறையிடுவதற்கு 0112 868 212 அல்லது 0112 868 214 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும்; அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக கபே எனப்படும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் 7ஆயிரத்து 500 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளது.

வழமையை விட அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், கண்காணிப்பு பணிகளுக்காக அதிகளவான ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது. Read more

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பாடசாலைக்கு மும்பாக இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.

பாடசாலைக்கு முன்பாக வீதியில் சைக்கிளில் சென்ற மாணவர்களை கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி வந்த வாகனம் மோதித் தள்ளியதில் சம்பவ இடத்திலேயே ஒரு மாணவன் பலியாகியதுடன் மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். Read more

புகையிரத தொழிற்சங்க நடவடிக்கை நேற்று பிற்பகல் கைவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலுக்கு முன்னர் புகையிரத தொழிற்சங்கப் பிரதிநிதிகள், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிடுமாறு ஜனாதிபதி இதன்போது தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு அறிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more

புத்தளம் அருவக்காலு குப்பை சேகரிக்கும் பிரிவில் நேற்று இரவு பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரவு 8.45 மணிக்கும் 9 மணிக்கும் இடைப்பட்ட ஒரு நேரத்தில் இவ்வாறு பாரிய சத்தத்துடன் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாவும், இந்த வெடிப்பு சம்பவத்தால் அருவக்காலு குப்பைத் திட்டப் பிரிவை அண்மித்த கரைத்தீவு மற்றும் சேராக்குளி ஆகிய கிராமங்களில் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டதாகவும், வெடிப்பு சம்பவத்தை அடுத்து, மேற்படி இரண்டு கிராமங்களில் வாழும் மக்கள் அச்சமடைந்ததுடன், அந்த பகுதியில் அமைதியின்மையும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Read more

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியிலுள்ள பிள்ளையாரடி பிரதேசத்தில் கட்டிட நிர்மாண நில அகழ்வின்போது மோட்டார் குண்டு ஒன்றை நேற்று மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறித்த பிரதேசம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியாகும். இக்காணியிலே கட்டிட நிர்மாண வேலைக்காக நிலத்தைக் கனரக (பக்கோ) இயந்திரம் மூலம் சம்பவ தினமான இன்று தோண்டினார்கள். Read more

துனிசியா நாட்டிலிருந்து 50 பேருடன் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் படகு ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது.

அந்த படகு அங்குள்ள லம்பேடுசா தீவை நெருங்கியபோது, மோசமான வானிலை காரணமாக கடல் அலையில் சிக்கி கவிழ்ந்தது. இதில் 13 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த இத்தாலி கடற்கரை படையினர், இரு மீட்பு கப்பல்களுடன் சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 22 பேரை மீட்டனர். Read more