ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக கபே எனப்படும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் 7ஆயிரத்து 500 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளது.

வழமையை விட அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், கண்காணிப்பு பணிகளுக்காக அதிகளவான ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் சட்டங்களை மீறிய 103 சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே எனப்படும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகளில் அதிகளவான முறைப்பாடுகள், வேட்புமனு தாக்கல் இடம்பெற்ற நேற்று செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 96 ஆகும். அதற்கு முன் 7 முறைப்பாடுகள் மாத்திரமே முன்வைக்கப்பட்டிருந்தாக கபே கூறியுள்ளது.