புகையிரத தொழிற்சங்க நடவடிக்கை நேற்று பிற்பகல் கைவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலுக்கு முன்னர் புகையிரத தொழிற்சங்கப் பிரதிநிதிகள், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிடுமாறு ஜனாதிபதி இதன்போது தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு அறிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பள முரண்பாட்டை அடிப்படையாக வைத்து புகையிரத ஊழியர்கள் தொடர்ந்து 12 நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.