மட்டக்களப்பு – திருகோணமலை வீதியிலுள்ள பிள்ளையாரடி பிரதேசத்தில் கட்டிட நிர்மாண நில அகழ்வின்போது மோட்டார் குண்டு ஒன்றை நேற்று மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறித்த பிரதேசம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியாகும். இக்காணியிலே கட்டிட நிர்மாண வேலைக்காக நிலத்தைக் கனரக (பக்கோ) இயந்திரம் மூலம் சம்பவ தினமான இன்று தோண்டினார்கள். இதன்போதே மோட்டார் குண்டு ஒன்று வெளியில் வந்துள்ளதையடுத்து இவ்விடயமாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர், குண்டு செயலிழக்கும் பிரிவு, மற்றும் பொலிசார் குறித்த குண்டை மீட்டுள்ளதுடன் இந்த மோட்டார் குண்டு யுத்தகாலத்தில் பாவிக்கப்பட வெடிக்காத நிலையிலிருந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.