துனிசியா நாட்டிலிருந்து 50 பேருடன் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் படகு ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது.

அந்த படகு அங்குள்ள லம்பேடுசா தீவை நெருங்கியபோது, மோசமான வானிலை காரணமாக கடல் அலையில் சிக்கி கவிழ்ந்தது. இதில் 13 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த இத்தாலி கடற்கரை படையினர், இரு மீட்பு கப்பல்களுடன் சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 22 பேரை மீட்டனர்.மேலும் உயிரிழந்த 13 பெண்களின் சடலமும் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை மத்தியதரைக் கடலில் இது போன்ற விபத்துகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.