இங்கிலாந்தின் பின்னர் நகரில் கடந்த மார்ச் மாதம் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்டவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பின்னர் நகரில் உள்ள மார்ஷ் வீதியில் கடந்த மார்ச் மாதம் 24ம் தகிதி ரவி கதர்குமார் என்ற இலங்கையர் கொலைசெய்யப்பட்டிருந்தார். இது தொடர்பாக அலெக்சாண்டர் ஸ்ரெபன் கன் என்ற 31 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. நேற்றைய விசாரணையில் அவர் குற்றவாளி ஒன்று அடையாளம் காணப்பட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு நாளை தண்டனை விதிக்கப்படவுள்ளது.