கொழும்பு – ஜம்பட்டா வீதியில் மேற்கொள்ளப்பட்டு துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 7.50 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜம்பட்டா வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 24 வயதுடைய சூரியகாந்த் என்ற 131 தோட்டம், ஜம்பட்டா வீதி பிரதேசத்தை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.