லண்டன் – லூட்டோன் விமான நிலையத்தில் கடந்த தினங்களில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்றுடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் குறித்த நான்கு பேரும் கடன் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுள் பெண் ஒருவர் ஏலவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏனைய 3 ஆண்களும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் அவர்களும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டதாக, மெட்ரோ பொலிட்டன் காவற்துறை இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் நவம்பவர் மாதம் முதல் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.