புலிகளின் சீருடை என சந்தேகிக்கப்படும் ஆடைகளுடன் வவுனியாவில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா – புதியபேருந்து நிலையத்தில் வைத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் இருந்து புலிகளின் சீருடையை ஒத்த ஆடையும், புலிச்சின்னம் பொறிக்கப்பட்டதாக கூறப்படும் தொப்பி என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. கைதானவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது. அவர் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.