Header image alt text

தூய்மையான மக்கள் மயமான அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம் எனத் தெரிவித்த புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஊழல் வாதிகளை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கும் அனைவரும் போட்டியை கைவிட்டு வெளியேற வேண்டும் என்று இதன்போது கூறினார்.

அத்துடன் பிரேமதாச இந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கான பொறுப்பை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கைகளிலேயே ஒப்படைப்பதாவும் அவர் சுட்டிக்காட்டினார். புதிய ஜனாநயக முன்னணியின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் பிரசாரக்கூட்டம் இன்று கொழும்பு, காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறுனார். Read more

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பிலிருந்த சந்தேகத்தின்பேரில் ஏழு பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனர்.

மலாக்கா, நெகிரி செம்பிலான், கெடா, கோலாலம்பூர், பேராக் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும், சிலாங்கூரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். மலாக்கா மாநில நிர்வாக மன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன், சிரம்பான் ஜெயா பாராளுமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் ஆகியோர் அவர்களுள் அடங்குவர். ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பிலிருந்த சந்தேகத்தின்பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். Read more

இலங்கையில் நிலைமாற்றம், ஒருமைப்பாடு மற்றும் மக்களாட்சி தொடர்பான திட்டத்தை முன்னெடுப்பதற்கு 40 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது.

இது குறித்து இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தூதுவர் துங்-லாய் மார்க், ‘நாட்டின் வளர்ச்சி அனைவருக்கும் சென்றடைவதை உறுதிசெய்வதற்கு நல்லாட்சி மற்றும் சமூகங்களின் பங்களிப்பு போன்றவை அவசியமாகும். Read more

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார். சுகயீனம் காரணமாக இன்று அதிகாலை 3 மணியளவில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனே காலை 8.30 மணியளவில் வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாடே சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணம் என உறவினர்கள், வைத்தியர்களுடன் முரண்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவத்தில் பொலிஸார் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். Read more

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாகக் கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல், இம்மாதம் 24ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read more

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ மையத்திற்க 46 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அவற்றுள் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் ஒரு முறைப்பாடு உள்ளதாகவும் அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதேநேரம், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் முதல் இதுவரை, தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் 36 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பெப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். Read more

வவுனியாவில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் நேற்றையதினம் காணாமற்போன நிலையில் அவரது சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள காட்டில் முச்சக்கர வண்டி ஒன்று தனிமையில் நின்றிருந்த நிலையில், அதனை அவ்வீதியூடாக சென்ற இளைஞர்கள் அவதானித்துள்ளனர். அதன் பின்னர் பற்றைக்குள்ளிலிருந்து அவர் இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவ, தெரேசியா தோட்டத்தில் முதலாம் இலக்க தொடர் லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள மண்மேடு ஒன்று கற்பாறையுடன் சரிந்து விழுந்துள்ளமையால் ஒரு குடியிருப்பு பகுதி அளவில் சேதமடைந்துள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குறித்த தோட்ட லயன் குடியிருப்பில் வசித்து வந்த 7 குடும்பங்களை சேர்ந்த 56 பேரை இடம் பெயருமாறு அறிவிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை வேளையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று முற்பகல் ஶ்ரீலங்கா அறக்கட்டளை நிறுவனத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத் தாகியுள்ளது.

புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் கோம்பாவில் பகுதியில் வீதி ஓரத்தில் உள்ள இரும்பு கடை அமைந்துள்ள வளாகத்தில் விடுதலைப்புலிகளால் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் புதைத்து வைத்துள்ளதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டப்பட்ட போதும் எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் நடவடிக்கையினை கைவிட்டுள்ளார்கள். இந்நிலையில், மீண்டும் நேற்று காலை தொடக்கம் மாலை வரை தோண்டும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. Read more