உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாகக் கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல், இம்மாதம் 24ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில், இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே, இந்த விளக்கமறியல் உத்தரவை நீதிபதி பிறப்பித்தார். மேற்படி சந்தேகநபர்களில் 04 பெண்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.