ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ மையத்திற்க 46 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அவற்றுள் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் ஒரு முறைப்பாடு உள்ளதாகவும் அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதேநேரம், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் முதல் இதுவரை, தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் 36 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பெப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 156 முறைப்பாடுகள் பதிவு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி தொடக்கம் நேற்று மாலை 4.30 வரையிலான 24 மணித்தியாலங்களில் 93 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட தினத்தில் இருந்து நேற்று மாலை 4.30 மணிவரை 156 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.