Header image alt text

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற்று நிறைவடைந்துள்ளது. 47 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்ற வாக்களிப்பில் காலை 7மணிமுதல் மாலை 4மணிவரை 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

வாக்களிப்பு நடவடிக்கைகள் மிக வெற்றிகரமாக இடம்பெற்றதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதாரபத்திரன தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் 53,384 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். Read more

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஒக்டோபர் 8 ஆம் திகதியில் இருந்து இதுவரை 269 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் வன்முறைகள், விதிமீறல்கள் உள்ளிட்டவை தொடர்பில் இந்த முறைப்பாடுகள் இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் இரண்டு வன்முறை சம்பவங்கள், 109 சட்டமீறல்கள் மற்றும் இரண்டு வேறு விடயங்கள் குறித்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 35 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். எனினும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த 19 வேட்பாளர்களும், சுயேட்சையாக 19 வேட்பாளர்களும் மற்றும் வேறு கட்சிகளை சேர்ந்த 3 வேட்பாளர்களுமாக 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 7 ஆம் திகதி 35 வேட்பாளர்கள் மாத்திரம் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த வேட்பாளர்களின் பெயர் விபரங்களும் சின்னங்களும் தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. Read more

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளின் தேசிய அடையாள அட்டை தொடர்பிலான விசாரணைகளுக்கு விசேட தொலைப்பேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை அடையாள அட்டை கிடைக்காத பரீட்சை விண்ணப்பதாரிகள் 0115 226 115 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு ஆட்பதிவுத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

கொழும்பு யுனியன் பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் 33 வது மாடியில் இருந்து வீழ்ந்து அவுஸ்திரேலியா பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்றுகாலையில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

52 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலீஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய நாட்டவரான போல் ஜேம்ஸ் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரதேசப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு – பொலன்னறுவை ரயில் வீதியின் ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ´மீனகயா´ ரயில் நேற்று இரவு வெலிகந்த மற்றும் மனம்பிட்டியவிற்கு இடையிலான பிரதேசத்தில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காட்டு யானை ஒன்று மோதியதில் ரயில் தடம்புரண்டுள்ள நிலையில், ரயில் போக்குவரத்தை இதுவரை வழமைக்கு கொண்டுவர முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக குறித்த வீதியில் ரயில் போக்குவரத்து இடம்பெறாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

வவுனியா நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றுமுன்தினம் காலை இலுப்பைகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்திற்குள்ளாகியது. விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். Read more