2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 35 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். எனினும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த 19 வேட்பாளர்களும், சுயேட்சையாக 19 வேட்பாளர்களும் மற்றும் வேறு கட்சிகளை சேர்ந்த 3 வேட்பாளர்களுமாக 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 7 ஆம் திகதி 35 வேட்பாளர்கள் மாத்திரம் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த வேட்பாளர்களின் பெயர் விபரங்களும் சின்னங்களும் தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.