மட்டக்களப்பு – பொலன்னறுவை ரயில் வீதியின் ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ´மீனகயா´ ரயில் நேற்று இரவு வெலிகந்த மற்றும் மனம்பிட்டியவிற்கு இடையிலான பிரதேசத்தில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காட்டு யானை ஒன்று மோதியதில் ரயில் தடம்புரண்டுள்ள நிலையில், ரயில் போக்குவரத்தை இதுவரை வழமைக்கு கொண்டுவர முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக குறித்த வீதியில் ரயில் போக்குவரத்து இடம்பெறாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.