வவுனியா நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றுமுன்தினம் காலை இலுப்பைகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்திற்குள்ளாகியது. விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். பட்டிகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கந்தையா உதயகுமார் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.