எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி 23 ஆயிரத்து 372 வாக்குகளை பெற்று 17 ஆசனங்களை கைப்பற்றியது.

ஐக்கிய தேசிய கட்சி 10 ஆயிரத்து 113 வாக்குகளை பெற்று 7ஆசனங்களை கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5 ஆயிரத்து 273 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியது. ஜே.வி.பி 2 ஆயிரத்து 435 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இதன்படி எல்பிட்டிய பிரதேச சபையின் 17 தொகுதிகளையும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றிகொண்டு எல்பிட்டிய பிரதேசசபை அதிகாரத்தை தனதாகிக்கொண்டுள்ளது. இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து 20 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.