எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தபால் மூலம் தமது வாக்குகளைப் பதிவு செய்ய சுமார் 7 இலட்சம் பேர் வரை விண்ணப்பம் செய்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 4ஆம் திகதியுடன் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில், தற்போது கிடைக்கப்பெற்ற சுமார் 7இலட்சம் விண்ணப்பங்களில் தகுதியானவர்களைத் தெரிவுசெய்யும் பரிசீலனைகள் இடம்பெற்றுவருவதாக அந்த ஆணைக் குழு மேலும் தெரிவித்துள்ளது. இவ்வாறு தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரிகளுக்கு மட்டும் எதிர்வரும் 30ஆம் 31ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப்பதிவின்போது வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.