Header image alt text

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் எதிர்வரும் 17 ஆம் திகதி ´யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்´ உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more

ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகள் எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் அரச அச்சகத்தால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆரசாங்க அச்சகர் கங்கா கல்பனி லியனகே இதனை கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் நீளம் 26 அங்குலமாக அமையும் என தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்த நிலையில், வாக்குச்சீட்டினை அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 433 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில்,

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 73 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் மற்றும் வேறு 09 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் 04.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 84 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது.

கொட்டகலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இதனை அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்காக அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் நிலைமை குறிப்பிடதக்களவு அதிகரித்துள்ளதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த அதிகரித்த நிலைமையை அவதானிக்க முடிவதாக அந்த அமைப்பின் உதவி பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீம் தெரிவித்துள்ளார். குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்களின் வாகனங்கள், சொத்துக்கள் மற்றும் அமைச்சுக்களின் வாகனங்களையும் சொத்துக்களையும் தேர்தல் நடவடிக்கைக்காக பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். Read more

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானினால் நியமிக்கப்பட்ட இலங்கைகான புதிய உயர்ஸ்தானிகர் தொடர்பில் பாகிஸ்தானில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாட் கட்டாக் அந்த பதவிக்கு பெயரிடப்பட்ட நிலையில். அதனை ரத்துச் செய்வதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டது. பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய தூதுவராக சாட் கட்டாக்கை நியமித்தபோது, Read more

ஜப்பானில் ஏற்பட்டுள்ள ஹெகிபிஸ் சூறாவளி காரணமாக அங்கு செல்லும் விமானம் 7 மணி நேரம் தாமதமாகியே பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் வான் சேவை நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. அந்த சூறாவளி இன்று பிற்பகல் ஜப்பானை கடக்கவுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய இன்று இரவு 7.15 அளவில் ஜப்பான் – நரீடா நோக்கி பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் வானுர்தி சேவைக்கு சொந்தமான யூ.எல். 460 ரக வானுர்தி நாளை அதிகாலை 2.15 அளவில் பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

திருகோணமலை சேருநுவர பகுதியில் நேற்றிரவு கைதான இளைஞனின் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் மற்றும் கருவிகள் மீட்கப்பட்டுள்ளன.

முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினரான குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இன்று கிளிநொச்சி அம்பாள் குளத்தில் அமைந்துள்ள கைதானவரின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது குறித்த வீட்டிலிருந்து கைதுசெய்யப்பட்ட நபரின் மனைவி மற்றும் அவரது சகோதரி கைதுசெய்யப்பட்டனர். Read more

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் மேலும் ஐந்து பேர் மலேசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஐவரும் மலாக்கா பேன்னெங், மற்றும் சிலாங்கூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் இரண்டு அரசியல்வாதிகள் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த வியாழக்கிழமை அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். Read more