இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது.

கொட்டகலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இதனை அறிவித்துள்ளார்.