திருகோணமலை சேருநுவர பகுதியில் நேற்றிரவு கைதான இளைஞனின் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் மற்றும் கருவிகள் மீட்கப்பட்டுள்ளன.

முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினரான குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இன்று கிளிநொச்சி அம்பாள் குளத்தில் அமைந்துள்ள கைதானவரின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது குறித்த வீட்டிலிருந்து கைதுசெய்யப்பட்ட நபரின் மனைவி மற்றும் அவரது சகோதரி கைதுசெய்யப்பட்டனர். கிளிநொச்சி பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த வீட்டை சோதனைக்குட்படுத்தினர். குறித்த சோதனை நடவடிக்கையின்போது ரி56 ரக துப்பாக்கி 1, சிறிய ரக துப்பாக்கிகள் 3, கைக்குண்டுகள் 5, ரி 57 துப்பாக்கி ரவைகள் 150, சிறிய ரக துப்பாக்கி ரவை 45, மடிக்கணினி 1, தொலைபேசிகள் 4, எம் கே.எம் ஜி ரவைகள் 6, வெடிப்பு கருவிக்கான வயர்கள், வெடிப்பு கருவிகள் 4, ஜிபிஎஸ் 1, தானியக்கிகள் என்பன மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.