புத்தளம், எலுவங்குளம் ஊடாக மன்னார் செல்லும் வீதி இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

கலாஓயா ஆறு பெருக்கெடுத்தமையால் புத்தளம், பழைய எலுவங்குளம், சப்பாத்து பாலத்திற்கு மேலாக இரண்டரை அடி உயரத்தில் நீர் மேவிப் பாய்வதாலேயே குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அலஹகோன் தெரிவித்தார். எனவே புத்தளம், எலுவங்குளம் ஊடாக மன்னார் செல்லும் மற்றும் மன்னாரில் இருந்து மரிச்சிக்கட்டி ஊடாக புத்தளம் செல்லும் அனைத்து வாகனங்களும் மறு அறிவித்தல் வரை போக்குவரத்துக்காக மாற்று வழியைப் பயன்படுத்துமாறும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.