Header image alt text

பிரித்தானியாவிற்கான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி கட்சியின் அந்நாட்டு அமைப்பாளராக பாலா, உதவி அமைப்பாளராக ஸ்கந்தா, நிர்வாகப் பொறுப்பாளராக கமலி, உதவி நிர்வாகப் பொறுப்பாளராக ராசிக்,

பொருளாளராக வரதன், அங்கத்துவ நடவடிக்கை பொறுப்பாளர்களாக தயா மற்றும் முரளி, தகவல் பிரிவு பொறுப்பாளர்களாக டொக்டர் சுரேஸ் மற்றும் சிவபாலன், நலன்புரிப் பொறுப்பாளர்களாக வேந்தன், பாபு, உதயன், முகுந்தன், சந்துரு, இணைப்பாளராக அல்வின் ஆகிய தோழர்களும், நிர்வாக அங்கத்தவர்களாக சபா, நிரோசன், தயாமயூரன், சபா (சாவகச்சேரி), பிறேம்சங்கர், சங்கர் ஆகிய தோழர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இந்திய தொழிநுட்ப அதிகாரிகள் குழுவுடன் இந்தியாவின் எயார் இந்திய அலைன்ஸ் விமானம் ஒன்று இன்று யாழ். பலாலி விமான நிலையத்தில் தரை இறங்கியுள்ளது.

குறித்த விமானத்தில் வருகை தந்திருந்த இந்திய அதிகாரிகள் பலாலி ஓடுபாதை பரிசோதனை, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராயவுள்ளனர். இதேவேளை 17 ஆம் திகதி விமான நிலைய திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 588 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08ஆம் திகதிமுதல் நேற்றுவரை இவ்முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 565 முறைப்பாடுகளும்,

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 6 முறைப்பாடுகளும் மற்றும் 17 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் 04.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24மணிநேரத்தில் 75 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த நூதனசாலை நிர்மாண பணிகளின்போது அரச நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் வழக்கு எதிர்வரும் 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு விசேட மேல் நீதிமன்றத்தில் நீதிபதிகளான சம்பத் விஜேரத்ன, சம்பத் அபேகோன், சம்பா ஜானகி ஆகிய மூவர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மக்களும் தேர்தலில் கலந்துகொண்டு, வாக்களிப்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியிருக்கிறது.

அரசியலமைப்பின் 3 ஆவது சரத்தின் பிரகாரம் மக்கள் ஆணையை வலுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிய வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் தேர்தல்களில், ‘எந்தவொரு பிரஜையும் தவிர்க்காத தேர்தலை உறுதிசெய்தல்’ தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெகுவாகக் கவனம் செலுத்தியிருக்கிறது. Read more

மலேசியாவில் புலிகளின் அமைப்பிற்கு ஆதரவளித்தமை தொடர்பில் கைதான 12 பேரும் காவற்துறையினரால் நியாயமான காரணங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

காவற்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவரும் சூழலில் மலேசிய பிரதமர் மஹதீர் மொஹமட் இது தொடர்பில் சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். Read more

சிலாபம் பகுதியில் சந்தேகமான முறையில் சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த 6 தமிழ் இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கோப்பாய் மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய பிரதேசங்களில் வசித்து வருபவர்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மேற்படி சந்தேக நபர்கள் கடல் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்காக குறித்த சுற்றுலா விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டைகள், எதிர்வரும் 18ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படவுள்ளன. அதற்கமைய மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் ஊடாக அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் ரசிக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டை, அங்கீகரிக்கபட்ட கடவுச்சீட்டு, வாகன அனுமதிப்பத்திரம், வயதானவர்களுக்கான அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை முதலான அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை கொண்டிராதவர்களுக்கு இந்த தற்காலிக அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. Read more