அனைத்து மக்களும் தேர்தலில் கலந்துகொண்டு, வாக்களிப்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியிருக்கிறது.

அரசியலமைப்பின் 3 ஆவது சரத்தின் பிரகாரம் மக்கள் ஆணையை வலுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிய வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் தேர்தல்களில், ‘எந்தவொரு பிரஜையும் தவிர்க்காத தேர்தலை உறுதிசெய்தல்’ தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெகுவாகக் கவனம் செலுத்தியிருக்கிறது. அதன் பிரகாரம் அனைத்து மக்களும் தேர்தலில் கலந்துகொண்டு, வாக்களிப்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் தீபிகா உடகமவினால் எழுதப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.