Header image alt text

ஜேர்மன் நாட்டிற்கான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி கட்சியின் அந்நாட்டு அமைப்பாளராக பவானந், நிர்வாகப் பொறுப்பாளராக த.சிவகுமாரன், நிதிப் பொறுப்பாளராக சந்திரன் ஆகிய தோழர்களும்,

நிர்வாக அங்கத்தவர்களாக தர்மகுமார், சத்தியமூர்த்தி, வேலானந்தன், பிரபா ஆகிய தோழர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக முன்வைக்கப்பட்ட 78,403 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு 717918 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இந்தத் தேர்தலில் 639515 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இறுதி பெறுபேறுகளை நவம்பர் 18ஆம் திகதி மதியத்துக்குள் வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். இம்முறை தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டு அதிக நீளமானது என்பதால், வாக்குகள் எண்ணும் பணிகளுக்கு அதிக நேரம் செல்லும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுப்பெற்ற பின்னரும், தற்போது பயன்படுத்துகின்ற உத்தியோகபூர்வ இல்லத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது.

கொழும்பு7, மஹகமசேகர மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லமே அவருக்கு இவ்வாறு வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. Read more

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் அமைக்கப்பட்ட புதிய முருங்கன் பொலிஸ் நிலையம் நேற்று மாலை வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

தற்காலிகமாக இயங்கி வந்த முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கான நிறந்தர கட்டிடமானது 5 ஏக்கர் நிலப்பரப்பில் பொலிஸ் திணைக்களத்தின் 4.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வைபவ ரீதியாக திறந்து உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. Read more

யாழ்ப்பாணம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட காலமாக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உடமையிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜமேசன் அஜந்தன் (வயது 21) என்ற இளைஞனே நேற்று கைது செய்யப்பட்டார். வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டில் பல முறைப்பாடுகளின் கீழ் இளைஞனை பொலிஸார் தேடி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read more