நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இறுதி பெறுபேறுகளை நவம்பர் 18ஆம் திகதி மதியத்துக்குள் வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். இம்முறை தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டு அதிக நீளமானது என்பதால், வாக்குகள் எண்ணும் பணிகளுக்கு அதிக நேரம் செல்லும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, எதிர்வரும் மாகாண சபை தேர்தலின்போது, குறைந்தது ஒரு மாகாணத்திலாவது இலத்திரனியல் வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்காக, இந்தியா மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழக்கத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.